காதலனின் ஆணு உறுப்பை வெட்டி வீசிய காதலி

 ஒருவரின் இதயம் உடைந்தால், பழி வாங்க ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை  நிரூபித்திருக்கிறார் தைய்வான் பெண் ஒருவர்.  துரோகம் செய்த தனது காதலனுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான தண்டனையை கொடுத்துள்ளார். 


தைவானின் சாங்குவா கவுண்டியில் உள்ள ஷிஹு டவுனில் நடந்த ஒரு சம்பவம் இது. ஹுவாங் என்ற நபர் இரவில் அதிக அளவில் குடித்து, சிக்கன் நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகு அவர் நன்றாகத் தூங்கி விட்டார்.


இவருக்கு  ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். எனினும் அவர், 

 ஒரு பெண்னை காதலித்துள்ளார். பொய்  கூறி ஏமாற்றியதால், அந்த காதலிக்கு மிகவும் ஆத்திரம் ஏற்பட்டது. 


நன்றாக தூங்கிக் கொண்டிருந்த காதலனின் ஆணுறுப்பை வெட்டியதோடு மட்டுமல்லாமல், அதனை மீண்டும் ஆபரேஷன் செய்து இணைக்க கூடாது என்பதால், அதை கழிப்பறைக்கு சென்று ப்ளஷ் செய்து விட்டாள். 


இதில் ஆச்சர்யமான விஷயம் என்னெவென்றால், அவர் வெட்டியது, அந்த காதலனுக்கு தெரியவே இல்லை. ஆனால் காலையில் எழுந்தபோது, படுக்கையில் ரத்தம் பார்த்த பின் த்தான் அவர் வலியை உணர்ந்திருக்கிறார்.  ரத்தத்தைக் கண்டு பிறகு தனது ஆணுறுப்பு காணவில்லை என்பதை அறிந்து கொண்டார். மேலும், அவரது  காதலி புங் தனது ஆணுறுப்பை வெட்டி கழிப்பறையில் ப்ளஷ் செய்ததை அறிந்து மயக்கம் போட்டே விழுந்து விட்டார். 


காதலனுக்கு ஒரு பாடம் கற்பிக்க தான் இதை செய்ததாகவும், ஹுவாங் தனக்கு துரோகம் செய்ததாகவும் புங் தெரிவிக்கிறார்.

இருப்பினும், ஃபுங் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.