Website Facebook Twitter Youtube
Jaya Plus ( ஜெயா பிளஸ் )
ஜெயா தொலைக்காட்சி என்பது 'ஜெயா டிவி நெட்வொர்க்கு' சொந்தமான தமிழ் மொழி பொழுதுபோக்கு செய்மதித் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஆகத்து 22, 1999 ஆம் ஆண்டு முதல் சென்னை யை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது.
இத்தொலைக்காட்சி உலகெங்கும் உள்ள தமிழர் இல்லங்களில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்து சென்ற துவக்க அலைவரிசைகளில் ஒன்றுமாகும். இத்தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெடுந்தொடர்கள் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து பார்வையாளர்களுக்காக 'தரிசனம் தொலைக்காட்சி' மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. திசம்பர் 2010 முதல் ஒளித குறியீட்டை எம்பெக் இரண்டிலிருந்து எம்பெக் நான்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை அக்டோபர் 14, 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.
இந்த தொலைக்காட்சி செல்வி ஜெயலலிதாவின் ஜெ என்ற பெயரை மையமாக வைத்து ஆகத்து 22, 1999 ஆம் ஆண்டு முதல் அவரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அலைவரிசையின் கீழ் ஜெயா பிளஸ் என்ற செய்தி தொலைக்காட்சி, ஜெயா மாக்ஸ் என்ற இசை தொலைக்காட்சி மற்றும் ஜெயா மூவிஸ் என்ற திரைப்பட தொலைக்காட்சி போன்ற நான்கு அலைவரிசைகள் இயங்கி வருகின்றனர்.
- ஜெயா தொலைக்காட்சி - 24 மணி நேரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் திரையிடப்படுகிறது.
- ஜெயா மாக்ஸ் - 24 மணி நேர திரை இசை பாடல் நிகழ்ச்சிகள் திரையிடப்படுகிறது.
- ஜெயா பிளஸ் - 24 மணி நேரச் செய்தி தொலைக்காட்சியாக செயல்பட்டுவருகிறது.
- ஜெயா மூவிஸ் - 24 மணி நேர திரைப்பட தொலைக்காட்சியாக செயல்பட்டுவருகிறது.