Website Facebook Twitter Youtube
Zee Tamil News ( ஜீ தமிழ் செய்திகள் )
ஜீ தமிழ் (Zee Tamil or Zee Tamizh) என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தமிழ் மொழி பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை அக்டோபர் 12, 2008 ஆம் ஆண்டு முதல் சென்னையில் கிண்டியைத் தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. ஜீ தனது உயர் வரையறு தொலைக்காட்சியை அக்டோபர் 15, 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.
இது ஜீ தெலுங்கு மற்றும் ஜீ கன்னடத்திற்கு பிறகு மூன்றாவது தென்னிந்திய அலைவரிசையாக அக்டோபர் 12, 2008 அன்று ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. மேலும் கனடாவில் எத்னிக் சேனல் குழு என்ற நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது இந்த அலைவரிசை அக்டோபர் 15, 2017 ஆம் ஆண்டு முதல் தனது சின்னத்தையும் மற்றும் நிறத்தையும் புதுப்பித்ததுடன், சிறப்பு தூதுவராகாக தமிழ் திரைப்பட நடிகை ஜோதிகா மூலம் உயர் வரையறு தொலைக்காட்சியாக அறிமுகப்படுத்தியது.
ஜீ தமிழின் இரண்டாவது அலைவரிசையாக ஜீ திரை என்ற 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சி சேவை சனவரி 18, 2020 ஆம் ஆண்டு தனது ஒளிபரப்பை தொடங்கியது இதை நடிகர் கமல்ஹாசன் என்பவரால் 'ஜீ சினிமா விருது தமிழ் 2020' என்ற பிரமாண்ட விருது விழா மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டது.