நடிகை நிவேதாக்கு கொரோனா தொற்று!

 கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் நடிகர், நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நிவேதா தாமசுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நிவேதா தாமஸ், தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்துள்ளார். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் வந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.


இதுகுறித்து நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்காக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ விதிமுறைகளையும் கடைபிடிக்கிறேன். விரைவில் குணமடைந்து திரும்புவேன். எனக்கு ஆதரவும் அன்பும் காட்டியவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முகக் கவசம் அணியுங்கள்” என்று கூறியுள்ளார். இங்கிலாந்து பள்ளிகளில் பாலியல் துஸ்பிரயோக கலாச்சாரம்!!

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக புகார் ஒன்று இங்கிலாந்தை உலுக்கத் தயாராகிறது.

ஆசிய அமெரிக்கரான சோமா சாரா (22), இங்கிலாந்து பள்ளிகளில் படித்தவர். சாரா பாதி சீனர் என்பதால் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது அவரைப் பார்ப்பவர்கள் என்னுடன் வருகிறாயா, நீ அந்த ஆபாச நடிகையைப் போலவே இருக்கிறாய் என்று சொல்லி வம்பு செய்வார்களாம்.

சோமா சாரா


சாரா கொரோனா ஊரடங்கின்போது வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில், அவரது தோழிகள் பலர், சக மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கதைகளை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, இதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைவருக்கும் அழைப்பு ( Everyone's Invited)  என்ற இணையதளத்தைத் தொடங்கி, தாங்கள் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் .


ஒரே வாரத்தில் 300 பேர் தாங்கள் பாதிக்கப்பட்ட கதைகளை அந்த தளத்தில் பதிவேற்றம் செய்தார்கள்.மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான கதைகள் குவியத் தொடங்கின.


11 வயதேயான மாணவிகள் கூட, நிர்வாண படங்களைப் பகிர கட்டாயப்படுத்தப்பட்டது முதல், பார்ட்டிகளில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு துஷ்பிராயோகம் செய்யப்பட்டது வரையிலான கதைகள் குவிந்தன.


பிரதமர் போரிஸ் ஜான்சனும், இளவரசர் வில்லியமும் படித்த பள்ளிகள் உட்பட, இங்கிலாந்தின் ன் பிரபலமான 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.இன்று வரை, 8,000 மாணவிகளிடமிருந்து பாலியல் புகார்கள் வந்துள்ளதாக இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளார்கள்.


சாராவிடன்  இந்த புரட்சிகர திட்டத்தில் இணைந்திருப்பவர் கார் விபத்தில் பலியான பாஸ்ட் அண்டு புரியஸ் (Fast and the Furious) நடிகரான பவுல் வால்கர் மகளான மெடோ வால்கர்


ஆன்லைன் ஆபாச தளங்களும், தரம் குறைந்த பாலியல் கல்வியும்தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்கிறார் மெடோவால்கர். ஆனால்,சாரோவோ பெண்களுக்கும் இதில் பங்கு உண்டு என்கிறார்.


கிம் கார்திஷியன் போன்று அசாதாரண மாடல்கள் உடல்வாகைக் காட்டி, இளம்பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குபவர்களையும் குற்றம்சாட்டுகிறா அவர்.இதற்கிடையில், தங்கள் மகன் அல்லது மகள் இதுபோல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக தெரியவந்தால், புகாரளிக்க முன்வருமாறு போலீசார் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.]


இங்கிலாந்து கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் கூறும் போது எந்தவொரு பள்ளியும் "இளைஞர்கள் பாதுகாப்பற்றதாக உணரும் இடமாக" அல்லது துஷ்பிரயோகம் நடைபெறக்கூடிய இடமாக இருக்கக்கூடாது.


ஒரு வலைத்தளத்தில்  இடம்பெற்று உள்ள பள்ளி மாணவர்களால்  செய்யப்பட்ட பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் "அதிர்ச்சியூட்டும் மற்றும் வெறுக்கத்தக்கவையாக உள்ளன. இதுகுறித்து  தகுந்த நடவடிக்கை  எடுக்கப்படும் என கூறினார் 

காதலனின் ஆணு உறுப்பை வெட்டி வீசிய காதலி

 ஒருவரின் இதயம் உடைந்தால், பழி வாங்க ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை  நிரூபித்திருக்கிறார் தைய்வான் பெண் ஒருவர்.  துரோகம் செய்த தனது காதலனுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான தண்டனையை கொடுத்துள்ளார். 


தைவானின் சாங்குவா கவுண்டியில் உள்ள ஷிஹு டவுனில் நடந்த ஒரு சம்பவம் இது. ஹுவாங் என்ற நபர் இரவில் அதிக அளவில் குடித்து, சிக்கன் நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகு அவர் நன்றாகத் தூங்கி விட்டார்.


இவருக்கு  ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். எனினும் அவர், 

 ஒரு பெண்னை காதலித்துள்ளார். பொய்  கூறி ஏமாற்றியதால், அந்த காதலிக்கு மிகவும் ஆத்திரம் ஏற்பட்டது. 


நன்றாக தூங்கிக் கொண்டிருந்த காதலனின் ஆணுறுப்பை வெட்டியதோடு மட்டுமல்லாமல், அதனை மீண்டும் ஆபரேஷன் செய்து இணைக்க கூடாது என்பதால், அதை கழிப்பறைக்கு சென்று ப்ளஷ் செய்து விட்டாள். 


இதில் ஆச்சர்யமான விஷயம் என்னெவென்றால், அவர் வெட்டியது, அந்த காதலனுக்கு தெரியவே இல்லை. ஆனால் காலையில் எழுந்தபோது, படுக்கையில் ரத்தம் பார்த்த பின் த்தான் அவர் வலியை உணர்ந்திருக்கிறார்.  ரத்தத்தைக் கண்டு பிறகு தனது ஆணுறுப்பு காணவில்லை என்பதை அறிந்து கொண்டார். மேலும், அவரது  காதலி புங் தனது ஆணுறுப்பை வெட்டி கழிப்பறையில் ப்ளஷ் செய்ததை அறிந்து மயக்கம் போட்டே விழுந்து விட்டார். 


காதலனுக்கு ஒரு பாடம் கற்பிக்க தான் இதை செய்ததாகவும், ஹுவாங் தனக்கு துரோகம் செய்ததாகவும் புங் தெரிவிக்கிறார்.

இருப்பினும், ஃபுங் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.Zoomல் பேசிக்கொண்டிருந்த கணவர்: நிர்வாணமாக வந்து நின்ற மனைவியால் பரபரப்பு!

 COVID-19 தொற்றுநோய் பரவல் மத்தியில், கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் ஆலோசனைகளை நடத்துவதில் மக்களுக்கு  ஒரு வரப்பிரசாதமாக Zoom செயலி உள்ளது. ஆனால், அதே சமயத்தில் சில தர்மசங்கடங்களையும்  ஏற்படுத்துகிறது.சமீபத்தில், ஒரு தென்னாப்பிரிக்க தலைவர் பாராளுமன்ற ஜூம் (Zoom) கூட்டத்தில் பங்கேற்றார். இது தேசிய அளவில் நேரலையாக ஒளிப்ரப்பட்டது. 


சோலிலே என்டேவ் (Xolile Ndevu) என்பவர் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். மார்ச் 30 அன்று நடந்த கூட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் COVID-19 இறப்புகள் குறித்து, அங்குள்ள  23 தலைவர்களுடன் ஜூம் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.


அப்போது அவரது மனைவி தற்செயலாக நிர்வாணமாக தோன்றியதால், அவருக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகத்தில் இந்த வீடியோ மிகவும் வைரலாகியது அவருக்கு பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளது. திடீரென அவரது மனைவி நிர்வாணமாக அவருக்குப் பின்னால் தோன்றியபோது ஈஸ்டர்ன் கேப் (Eastern Cape) அமைப்பு உள்ளூர் மருத்துவர்களுடன் எவ்வாறு பணியாற்றுகிறது என்பதை என்டேவ் விளக்கிக் கொண்டிருந்தார் என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.


வைரல் வீடியோவில், அக்குழுவின்  தலைவர் பெயித் முத்தம்பி (Faith Muthambi) தலையிட்டு,  "உங்களுக்குப் பின்னால் உள்ளவர் சரியாக ஆடை அணியவில்லை," என்று என்டேவுவிடம் எச்சரிப்பதைக் காணலாம்.